Admission

Admission

அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), கோவை-641 018

 

BA/B.Sc./B.COM/BBA மாணவர் சேர்க்கை தொடர்பாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெற கடைசி நாள்:18.05.2015 ஆகும்.

மாணவர்கள் விண்ணப்பத்துடன் மதிப்பெண் சான்றிதழின் நகல் அல்லது இணையதளத்தில் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியலின் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்கலாம்.

22.05.2015 அன்று மதிப்பெண் தரவரிசைப்பட்டியல் (Rank list) கல்லூரித் தகவல் பலகையிலும் கல்லூரியின் இணைய தளத்திலும் வெளியிடப்படும்.

(இணையதளத்தின் முகவரி gacbe.ac.in) கலந்தாய்வு அன்று தரவரிசைப்பட்டியலின் அடிப்படையில் நடைபெறும்.

  1. தமிழில் பெற்ற மதிப்பெண் அடிப்படையின் படி தமிழ் இலக்கியத்திற்கான தரவரிசைப்பட்டியல்.
  1. ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண் அடிப்படையின் படி ஆங்கில இலக்கியத்திற்கான தரவரிசைப்பட்டியல்.
  1. தமிழ் ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிறபாடங்களுக்கான தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்படும்.

25.05.2015 அன்று சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் (மாற்றுத் திறனாளி, விளையாட்டு வீரர், முன்னாள் படை வீரர் மகன்/மகள்)(Physically Challenged / Sports / Ex-Service Men)

26.05.2015 முதல் 30.05.2015 முடிய மதிப்பெண் தரவரிசைப்பட்டியலின் படி மற்ற பிரிவினர்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும்.

இக்கல்லூரியில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, சுற்றுலாவியல், பொருளியல்,அரசியல் அறிவியல், பொது நிர்வாகவியல், பாதுகாப்பியல், கணிதவியல், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், கணினி அறிவியல், உளவியல்,தகவல் தொழில்நுட்பவியல், வணிகவியல், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு, வணிக நிர்வாகவியல் ஆகிய 21 இளநிலை பிரிவுகளில் மொத்தம் 1359 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

எனவே மாணவர்கள் கலந்தாய்வு பட்டியலின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொண்டு தங்கள் விருப்பமான பாடங்களை தேர்வுசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 முதல்வர்

News & Announcements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

©All Right Reserved. Govt Arts College, Coimbatore
Maintained by GACBE